News April 10, 2024

பிரிந்த ஜோடியை சேர்த்து வைத்த பேஸ்புக்!

image

அமெரிக்காவில் பேஸ்புக்கின் சக்தியை அறிந்து கொள்ள, ஓராண்டுக்கு முன் தன்னையும், தனது 2 குழந்தைகளையும் விட்டு திடீரென மாயமான கணவர் சார்லஸை கண்டுபிடித்து தரக்கோரி ஆஷ்லி என்பவர் உருக்கமாக பதிவிட்டிருந்தார். அவரின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து ஆஷ்லியின் பழைய எண்ணுக்கு அழைத்த கணவர் சார்லஸ் விரைவில் வீடு திரும்புவதாக கூறியுள்ளார். கணவர் கிடைத்ததால் ஆஷ்லி தனது பழைய பதிவை நீக்கியுள்ளார்.

Similar News

News April 25, 2025

ராசி பலன்கள் (25.04.2025)

image

➤மேஷம் – வெற்றி ➤ரிஷபம் – பயம் ➤மிதுனம் – கவலை ➤கடகம் – ஆதாயம் ➤சிம்மம் – நோய் ➤கன்னி – துன்பம் ➤துலாம் – மகிழ்ச்சி ➤விருச்சிகம் – நன்மை ➤தனுசு – அமைதி ➤மகரம் – தாமதம் ➤கும்பம் – புகழ் ➤மீனம் – தடங்கல்.

News April 25, 2025

தேசத்துரோக வழக்கில் MLA கைது

image

பஹல்காம் தாக்குதலில் மோடி, அமித் ஷாவிற்கு தொடர்பிருப்பதாக கூறிய <<16202633>>அசாம் MLA<<>> அமினுல் இஸ்லாமை, அம்மாநில போலீசார் தேசத்துரோக வழக்கில் கைது செய்துள்ளனர். பாக்.கிற்கு ஆதரவாக அவர் பேசிய வீடியோவை பார்த்து கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக, புல்வாமா தாக்குதலை தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தி BJP வெற்றி பெற்றதை போல், பஹல்காம் தாக்குதலிலும் BJP-யின் சதி இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

News April 25, 2025

தவிக்கும் குணச்சித்திர நடிகர்.. உதவிக்கரம் நீட்டிய கார்த்தி

image

காலா, ஜெய் பீம் போன்ற பல படங்களில் குணச்சித்திர நடிகர் சுப்பிரமணி குழந்தைகளின் கல்வி செலவை நடிகர் கார்த்தி ஏற்றுக்கொண்டுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு நிதியுதவி செய்யுமாறு திரைத்துறையினருக்கும் அரசுக்கும் அவரது குடும்பத்தார் கோரிக்கை வைத்த நிலையில் நடிகர் கார்த்தி உதவ முன்வந்துள்ளார்.

error: Content is protected !!