News September 6, 2025

வாங்கிய பொருளை மாற்ற மறுத்தால் புகார் அளிக்கலாம்

image

கடைகளில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்ற மறுத்தாலோ அல்லது பணத்தைத் திரும்பத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற, பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. விவரங்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 9445000396 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News September 6, 2025

இன்று இரவு காவல் ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப்.6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 6, 2025

கிருஷ்ணகிரி: குழந்தை வரம் அருளும் சந்திர சூடேஸ்வரர் கோயில்

image

சந்திர சூடேஸ்வரர் கோயில் ஓசூரில் உள்ள பாறை மலையின் மீது அமைந்துள்ள ஒரு பழமையான சிவன் கோயிலாகும். இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி மற்றும் உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் குழந்தை வரம் வேண்டி இத்தலத்தில் உள்ள வில்வ மரத்தில் தொட்டில் கட்டினால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News September 6, 2025

கிருஷ்ணகிரி மக்களே விலை தெரிஞ்சிக்கோங்க

image

கிருஷ்ணகிரி உழவர் சந்தையின் இன்றைய (செ.6) காய்கறி விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, (1 கிலோ) தக்காளி ரூ.14, உருளை ரூ.28, வெங்காயம் ரூ.20, மிளகாய் ரூ.45, கத்திரி ரூ.22, வெண்டைக்காய் ரூ.16, முருங்கை ரூ.40, பீர்க்கங்காய் ரூ.26, சுரைக்காய் ரூ.15, புடலங்காய் ரூ.24, பாகற்காய் ரூ.30, தேங்காய் ரூ.60, முள்ளங்கி ரூ.14, பீன்ஸ் ரூ.50, அவரை ரூ.35, கேரட் ரூ.60 என விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!