News September 6, 2025
வேலூர் தீர்த்தகிரி முருகரை கஞ்சா கருப்பு தரிசனம்

பிரபல நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, வேலூர் மாவட்டம் தீர்த்தகிரி முருகன் கோவிலுக்கு இன்று காலை வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். முருகப்பெருமான் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்ட அவர், அங்கு திரண்டிருந்த பக்தர்களிடம் கலந்துரையாடினார். கோவில் நிர்வாகத்தினரும் பக்தர்களும் அவரை அன்புடன் வரவேற்றனர்.
Similar News
News September 6, 2025
காட்பாடி 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் இன்று (செப்டம்பர் 06) காட்பாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 400 கிலோ குட்கா பொருட்கள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து குட்கா கடத்திய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விக்ரம் பவாட்டி (40) என்பவரை கைது செய்தனர்.
News September 6, 2025
திருவண்ணாமலை கிரிவலம்: பாதுகாப்பு பணிக்கு 200 போலீசார்

ஆவணி மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, தி.மலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், பாதுகாப்பு பணிக்காக வேலூர் மாவட்டத்தில் இருந்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில், 200 போலீசார், இன்று (செப்.6) தி.மலை மாவட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். என வேலூர் மாவட்ட SP தெரிவித்துள்ளார்.
News September 6, 2025
வேலூர் மாவட்டத்தில் திடீரென அதிகரித்த வெயில்

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது இந்நிலையில் இன்று (செப்டம்பர் 06) திடீரென அதிகபட்சமாக 99.3°F டிகிரி பாரன்ஹீட் வெயில் அளவு பதிவானது. இந்நிலையில் மாலை நேரத்தில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து ரம்மியமான சூழல் நிலவியது. மேலும் பல இடங்களில் லேசான மழை பெய்து மக்களை மகிழ்வித்தது.