News September 6, 2025

BREAKING: இபிஎஸ்-க்கு எதிராக விலகினார்.. பரபரப்பு அறிவிப்பு

image

NDA கூட்டணியில் இருந்து EPS-க்கு எதிராகவே வெளியேறியதாக டிடிவி தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார். கூட்டணி மற்றும் அதிமுக விவகாரத்தை அமித்ஷா சரி செய்வார் என காத்திருந்த வேளையில் <<17628629>>அண்ணாமலை<<>> தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சி அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். OPS-க்கு நடந்தது தனக்கும் நடக்கும் என உத்தேசித்து கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News March 12, 2026

TN-ல் தொடர்கதையாகும் வன்கொடுமை: கிருஷ்ணசாமி

image

தூத்துக்குடியில் கழிப்பறை வசதி இல்லாததால் வயல்வெளிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கவலையளிப்பதாக கிருஷ்ணசாமி பதிவிட்டுள்ளார். இதுபற்றி புகாரளிக்க சென்ற பெற்றோரை போலீஸ் அவமதித்ததாக கூறிய அவர், விழிப்புணர்வுடன் செயல்பட்டிருந்தால் மாணவியை காப்பாற்றியிருக்கலாம் என்றார். மேலும், TN-ல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாகவும் சாடியுள்ளார்.

News March 12, 2026

போரின் தாக்கம்.. சிமென்ட் விலை உயர வாய்ப்பு!

image

ஈரான்-இஸ்ரேல் போரின் தாக்கம் இந்தியாவில் சிமென்ட் துறையையும் பாதித்துள்ளதாக ‘எலாரா கேபிடல்’ நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 15 நாள்களில், கச்சா எண்ணெய் விலை 39%, நிலக்கரி 14% அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது. சிமென்ட் தயாரிப்புக்கான எரிபொருள் விலைகள் அதிகரித்து வருவதால், இதனை ஈடுசெய்ய சிமென்ட் மூட்டை சுமார் ₹6 வரை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

News March 12, 2026

FLASH: சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரிய சரிவு!

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் பெரிய அளவில் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $80(இந்திய மதிப்பில் ₹7,375) குறைந்து $5,150 ஆக உள்ளது. அதேபோல், வெள்ளி விலை 1 அவுன்ஸ் $4 குறைந்து $85 ஆக நீடிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் இந்திய சந்தையில் இன்று தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

error: Content is protected !!