News September 6, 2025

விருதுநகர்: செல்போன் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

image

விருதுநகர் மக்களே..! உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<> இங்கே கிளிக் செய்து<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News September 7, 2025

ஸ்ரீவியில் ஆட்டோ ஏற்றி கொலை செய்த கொடூரம்

image

ஸ்ரீவில்லிபுத்துார் சக்கரைகுளம் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் பொன்ராஜ் என்பவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நடந்து சென்ற செந்தில்குமார் மீது பொன்ராஜ் ஆட்டோவை ஏற்றி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பொன்ராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 7, 2025

மல்லாங்கிணறு காவல் நிலையத்திற்கு முதலமை‌ச்ச‌ர் விருது

image

கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான விருதுநகர் மாவட்ட அளவில் சிறந்த காவல் நிலையமாக மல்லாங்கிணர் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு பரிசு காவலர் நாளில் சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்களிடம் இருந்து மல்லாங்கிணர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மகேஸ்வரன் பெற்றுக் கொண்டார்.

News September 7, 2025

மானிய விலையில் காய்கறி, பழச்செடிகள் தொகுப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டத்தின் கீழ் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற 6 வகையான விதைகள் அடங்கிய தொகுப்பு 100% மானியத்தில் ரூ.60 வீதம் 41,500 எண்கள் வழங்கப்பட உள்ளது. இதேபோல் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை பழச்செடித் தொகுப்பு 100% மானியத்தில் 25,850 எண்கள் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உழவன் செயலியில் பதிவு செய்யலாம்.

error: Content is protected !!