News September 6, 2025

BREAKING: செங்கோட்டையன் பேச்சு குறித்து EPS ஆலோசனை

image

தேனியில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு திண்டுக்கல்லில் தங்கியுள்ள EPS, அதிமுக மூத்த தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இதில், KP முனுசாமி, SP வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், RB உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க செங்கோட்டையன் 10 நாள்கள் கெடு விதித்திருந்த நிலையில், இந்த அவசர ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.

Similar News

News September 6, 2025

திருப்பதியில் 12 மணி நேரம் தரிசனம் ரத்து

image

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை 12 மணி நேரம் அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்படவுள்ளது. கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு நாளை மறுநாள் காலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News September 6, 2025

ஆச்சரியம் ஆனால் உண்மை..!

image

புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வதில் அளப்பரிய சந்தோஷம் உள்ளது. நாம் கற்றுக் கொண்ட விஷயத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு, நமது புத்திசாலித்தனத்தை நிரூபிப்பதை காட்டிலும் வேறென்ன மகிழ்ச்சி இருக்கப் போகிறது. அந்த வகையில் வியக்க வைக்கும் சில அறிவியல் உண்மைகளை இங்கு தொகுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோக்களை Swipe செய்து அவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

News September 6, 2025

₹2,000 நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்

image

2023 அக்டோபர் முதல் வங்கிகளில் ₹2,000 நோட்டுகளை டெபாசிட் செய்வது நிறுத்தப்பட்டது. ஆனால், புழக்கத்தில் இருந்தவற்றில் ₹5,956 கோடி மதிப்பிலான நோட்டுகள் திரும்ப வரவில்லை என RBI தெரிவித்துள்ளது. உங்களிடம் ₹2,000 நோட்டுகள் இருந்தால் ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். சென்னை RBI அலுவலகம் சென்றால் பணம் அக்கவுண்டில் டெபாசிட் செய்யப்படும். தபால் நிலையத்திலும் மாற்றலாம்.

error: Content is protected !!