News September 6, 2025
₹450 கோடி விவகாரம்.. சசிகலா மீண்டும் கைதாகிறாரா?

சசிகலாவுக்கு சொந்தமான பத்மாவதி சுகர்ஸ் நிறுவனம் ₹450 கோடி நிதி மோசடி புகாரில் சிக்கியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ₹450 கோடி முறைகேடாக மாற்றப்பட்டதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் ஹிதேஷ் ஷிவ்கன் படேல் கூறிய தகவலின்படி, பினாமி சொத்து வழக்கின் கீழ் சசிகலாவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் வழக்குப்பதிவு செய்த CBI கடந்த மாதம் சென்னை, திருச்சி, தென்காசியில் சோதனை நடத்தியிருந்தது.
Similar News
News March 28, 2026
125 பட்டதாரிகளை களமிறக்கிய திமுக!

திமுக வெளியிட்ட 164 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலில் 60 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். 18 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். மேலும், முனைவர் பட்டம் பெற்றவர்கள் 7 பேர், சட்டம் படித்தவர்கள் 29 பேர், 15 டாக்டர்கள் என மொத்தம் 125 பட்டதாரிகளை திமுக இம்முறை வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளது.
News March 28, 2026
SRH ஆதிக்கத்தை முறியடிக்குமா RCB?

நடப்பு IPL சாம்பியனான RCB-க்கு கடும் சவாலை ஏற்படுத்திய அணிகளில் SRH-ம் ஒன்று. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 23 போட்டிகளில் 13-ல் SRH வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, IPL வரலாற்றின் அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களை, RCB-க்கு எதிராகத்தான் SRH அடித்தது. அதனால் இன்று தொடங்கும் <<19495958>>முதல் போட்டியே<<>> பெங்களூருவுக்கு சவாலாக இருக்கும் என நிச்சயமாக கூறலாம்.
News March 28, 2026
நாடு முழுவதும் ஊரடங்கு.. PM மோடி அறிவித்தாரா? FactCheck

எரிபொருள் தட்டுப்பாடு நெருக்கடியால், PM மோடி நாடு முழுவதும் லாக் டவுன் அறிவித்திருப்பதாக SM-ல் வீடியோ பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம் (PIB FACTCHECK), மத்திய அரசோ மோடியோ இதுபோன்று எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை எனத் தெரிவித்துள்ளது. 87997 11259 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தொடர்பு கொண்டு உண்மைத் தகவல்களை அறியலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.


