News September 6, 2025

விருதுநகரில் இன்று 108 ஆம்புலன்ஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு

image

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் இன்று 108, 102 ஆம்புலன்ஸ், இலவச அமரர் ஊர்திகளுக்கு ஓட்டுநர், உதவியாளர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஓட்டுநருக்கு ரூ.21,120 ஊதியமும், உதவியாளருக்கு ரூ.21,320 ஊதியமும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 73977 24824, 9942328254 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். SHARE IT

Similar News

News September 8, 2025

இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர் மோதி காயம்

image

அருப்புக்கோட்டை பெத்தம்மாள் நகர் அருகே உள்ள பங்கஜம் பெட்ரோல் பங்க் அருகில் கட்டகஞ்சம்பட்டி கிராமத்தைச் சார்ந்த மணி என்பவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் மோதியதில் 2 நபர்களுக்கும் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்

News September 7, 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனையில் பீகார் வாலிபர் உயிரிழப்பு

image

பீகார் மாநிலம், சஹோரா பகுதியைச் சேர்ந்த தூரியாமான்ஜி, சீல்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News September 7, 2025

விருதுநகர்: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

image

விருதுநகர் மக்களே, நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம்.(அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறியலாம். SHARE IT

error: Content is protected !!