News September 6, 2025
மீண்டும் அரவக்குறிச்சி? கணக்கு போடும் அண்ணாமலை

தமிழக அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. இந்நிலையில், சொந்த தொகுதியிலேயே தோல்வி என்ற இமேஜை மாற்ற, வரும் தேர்தலில் அண்ணாமலை மீண்டும் அரவக்குறிச்சியில் போட்டியிட திட்டமிடுவதாக கூறப்படுகிறது. MLA இளங்கோ மீது தொகுதி மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் வாக்குகள் தங்களுக்கு வரும் என தலைமை நம்புவதாகவும் கமலாலய வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.
Similar News
News April 2, 2026
சேலம் மக்களின் கவனத்திற்கு

சேலத்தில் பராமரிப்பு பணி காரணமாக ஏப்ரல் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் ஆன்லைன் மின்கட்டணம் மற்றும் புதிய இணைப்புச் சேவைகள் இயங்காது என மேற்பார்வை பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார். இதனால் ஏப்ரல் 4-ல் கட்டணம் செலுத்தக் கடைசி நாள் உள்ளவர்களுக்கு, ஏப்ரல் 6-ஆம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
News April 2, 2026
தாயின் உரிமையை மறுக்க நான் யார்? பிரகாஷ் ராஜ்

சர்ச்சில் நடந்த தனது தாயாரின் இறுதிச்சடங்கில் நாத்திகவாதியான பிரகாஷ் ராஜ் பங்கேற்றது ஏன் என SM-ல் பலர் விமர்சித்து வந்தனர். அதற்கு தனது X பக்கத்தில், தன் தாயார் கடவுளை நம்பினார்; அவர் நம்பிக்கையின்படி நல்லடக்கம் செய்யும் உரிமையை அவருக்கு மறுக்க தான் யார் என கேள்வி எழுப்பியுள்ளார். இது நாம் ஒருவருக்கொருவர் அளிக்கும் அடிப்படை மரியாதை; வெறுப்பை பரப்பும் அரக்கர்கள் இதை உணர்வார்களா என சாடியுள்ளார்.
News April 2, 2026
விஜய்யின் முடிவுக்கு திருமா வரவேற்பு.. எதற்காக?

பாஜக அழுத்தம் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையிலும் அக்கட்சியுடன் விஜய் கூட்டணி அமைக்கவில்லை என்ற கருத்து குறித்து திருமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அவரது முடிவு வரவேற்கத்தக்கது, இதனால் மட்டுமே அவர் பாஜகவை எதிர்க்கிறார் என்று அர்த்தமாகாது. அவரது நிலைப்பாடு தற்காலிகமானது என பதிலளித்துள்ளார். பாஜகவை நேரடியாக விமர்சிக்காத விஜய் தனது பிம்பத்தை தக்கவைப்பதற்காக கூட இம்முடிவை எடுத்திருக்கலாம் என்றார்.


