News September 6, 2025

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுவை மாணவி அசத்தல்!

image

புதுவை பாகூர் சேலியமேடு கீர்த்தனா, அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில் நுண்கலை படித்து வருகிறார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், மாணவி கீர்த்தனா, தனது வீட்டு மொட்டை மாடியில், 120 சதுர அடி பரப்பளவில், கோலமாவை கொண்டு, முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின், உருவத்தை தத்ரூபமாக வரைந்து, ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Similar News

News September 6, 2025

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பெருமிதம்

image

புதுச்சேரி முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தேசிய தரவரிசை பட்டியலில் கோரிமேடு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனம் 35 வது இடத்திலிருந்து 23வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. தென்னிந்திய அளவில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் இக்கல்லூரி மட்டுமே தேர்வாகியுள்ளது பெருமிதமாக உள்ளது.

News September 6, 2025

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் கைது!

image

புதுவை தவளக்குப்பம் பாலமுரளி, சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் அரசு பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவி ஒருவர், நேற்று முன்தினம், ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு சென்றார். பின் அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இது குறித்துமாணவி தனது பெற்றோரிடம் கூறினார். இது குறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் போக்சோ சட்டத்தில் பாலமுரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News September 6, 2025

சப்-இன்ஸ்பெக்டர் பணி வழிமுறைகள் வெளியீடு!

image

புதுவை காவல்துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. ஏற்கனவே கடந்த 8.11.2022 அன்று சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு வெளியிடப்பட்ட ஆள் சேர்ப்பு அறிவிப்பின்படி விண்ணப் பித்தவர்கள் & பணியில் உள்ள காவல்துறையினருக்கான வழிமுறைகள் புதுச்சேரி அரசின் ஆள்சேர்ப்பு இணையதளத்தில் (https://recruitment.py.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!