News September 6, 2025

நாகை: 18 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு விருது!

image

நாகை மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக செயல்பட்ட 13 முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது மற்றும் ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. இந்த விருதைப் பெறுவதற்கான முழுவிவரங்களை அறிய, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்று ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

Similar News

News September 6, 2025

வேளாங்கண்ணி நாளை பெரிய தேர் பவனி

image

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நாளை 7ந் தேதி இரவு நடக்கிறது. இதை முன்னிட்டு மாலை 5.15 மணிக்கு தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு நவநாள் ஜெபம் ஆகியவை நடத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து இரவு புதுவை, கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் தலைமையில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.

News September 6, 2025

நாகையில் போக்குவரத்து மாற்றம்

image

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவை முன்னிட்டு, இன்று (செப்.6) முதல் செப்.8 வரை, சென்னை, கடலூர், புதுச்சேரி வாகனங்கள் புத்தூர் ரவுண்டானா சாலை வழியாக சென்ட் பீட்டர்ஸ் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட வேண்டும். அரசுப் பேருந்துகள் பாப்பா கோவில் ஆர்ச் வழியாக புதிய தற்காலிக பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று நாகை மாவட்ட எஸ்.பி சு.செல்வக்குமார் போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளார்.

News September 6, 2025

நாகை: பட்டாவில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி!

image

நாகை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04365-253022 அணுகலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!