News September 6, 2025
HEALTH: மன அழுத்தம் பற்களை பாதிக்குமா? பாத்துக்கோங்க!

அதீத மன அழுத்தம் பற்கள், அதன் ஈறுகள், எலும்புகளை பாதிக்கும் என டாக்டர்கள் சொல்கின்றனர். Stress-ஆல் உடலில் சுரக்கும் கார்டிசோல் ஹார்மோன், எதிர்ப்பு சக்தியை குறைக்கிறதாம். இதனால் மன அழுத்தத்தை முறையாக கையாள்வதோடு, 8 மாதங்களுக்கு ஒரு முறை பல் செக்-அப் செய்துகொள்ள வேண்டும் எனவும் தினமும் 2 முறை பல் துலக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE IT.
Similar News
News March 21, 2026
QR code-ஐ கண்டுபிடித்தவரை பற்றி தெரியுமா..?

டிஜிட்டல் புரட்சிக்கு காரணமான QR code-ஐ கண்டுபிடித்தவர் ஜப்பானின் மாசாஹிரோ ஹரா. கார் கம்பெனியில் வேலை பார்த்த இவர், கார் Spare parts தகவல்களை கூடுதலாக, சேமிக்க வடிவமைத்ததே QR code. ஜப்பானின் ‘Go’ என்ற போர்ட் கேமின் டிசைன்தான் இவருக்கு inspiration. 1994-ல் QR code-ஐ வடிவமைத்த ஹரா, தற்போது உலகம் முழுக்க தனது கண்டுபிடிப்பு பயன்படுத்தப்பட்டாலும், அதற்காக காப்புரிமையோ, பணமோ கேட்டதில்லையாம்.
News March 21, 2026
தங்கம் விலை 10 நாள்களில் சவரனுக்கு ₹10,000 குறைந்தது

கடந்த 10 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹10,800 குறைந்து நகைப் பிரியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று 1 சவரன் ₹1,08,960-க்கு விற்பனையாகும் நிலையில், வரும் நாள்களில் மேலும் குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர். போர் பதற்றம் மற்றும் அமெரிக்க Fed Rate நிலைத்தன்மை காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
News March 21, 2026
தமிழக தேர்தலை நிறுத்தக் கோரி மனு.. காரணம் என்ன?

தமிழக தேர்தலை நிறுத்திவைக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் KK ரமேஷ் என்பவர் SC-ல் மனுதாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, போலீஸாரின் செயல்பாட்டில் திருப்தியில்லை உள்ளிட்ட காரணங்களை அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதுவரை இம்மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தமிழக பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23-ல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


