News September 6, 2025

கரூர் மக்களே இந்த நம்பர் இருக்கா?

image

கரூர் மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News September 6, 2025

கரூர்: “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

image

கரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் (செப்டம்பர் 9) அன்று “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறுகிறது. அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை வட்டங்களில் நடைபெறும் இம்முகாம்களில் 13 துறைகள் சார்ந்த 43 சேவைகள் வழங்கப்படுகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம், பென்ஷன், மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்ட பலவகை சேவைகள் குறித்த கோரிக்கைகளுக்கு நேரடியாக தீர்வு அளிக்கப்படும்.

News September 6, 2025

கரூரில் செப்.17ல் திமுக முப்பெரும் விழா!

image

கரூர் மாவட்டத்தில் வரும் செப்.17ல் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவிற்கான ஆலோசனை கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி திமுகவினர் கலந்துகொள்ளும் வகையில் உப்பிடமங்கலம் சக்தி மஹாலில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளும்படி எம்எல்ஏ சிவகாமசுந்தரி கேட்டுக்கொண்டுள்ளார்.

News September 6, 2025

கரூர்: கலைஞர் கனவு இல்லம் வேண்டுமா?

image

▶️கரூர் மாவட்ட மக்களே கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.350000 மானியம் வழங்கப்படுகிறது. ▶️வீடுகளில் கூடுதல் வசதிகள் செய்ய வங்கிகளில் ரூ.1.50 லட்சம் வரை கடனும் உண்டு. ▶️இதற்கு ஆதார், பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் தேவை. ▶️ஊராட்சி மன்றம் அலுவலகங்களிலும் நேரடியாக விண்ணப்பிக்கலாம். ▶️ அல்லது, https://www.tnrd.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!