News September 6, 2025

லட்சங்களில் வீடுகளைக் கட்டித் தந்த ஓய்வு பெற்ற துணைவேந்தர் !

image

அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்ற பாலகுருசாமி (79). தற்போது கோவை வடவள்ளியில் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பணிபுரியும் கார் டிரைவர் புவனேஷ்வரன், சமையல், வீட்டு வேலை, தோட்ட வேலை பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பாக்யா, கிருஷ்ணவேணி, பிரபாவதி ஆகிய 4 பேருக்கும் மருதமலை சாலையில் உள்ள ஐஓபி காலனியில் தனித்தனியாக தலா ரூ.80 லட்சத்தில் வீடுகள் கட்டி கொடுத்துள்ளார்.

Similar News

News September 6, 2025

BRAKING: கோவை அதிமுகவில் புதிய திருப்பம்!

image

கோவை: அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அமைப்பு செயலாளராக இருந்து வந்த செங்கோட்டையனை நீக்கி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்று முன்னர் அறிவித்தார். இந்த நிலையில் அதிமுகவின் ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் அந்த பொறுப்புக்கு தற்காலிகமாக மேட்டுப்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜை நியமித்து எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

News September 6, 2025

கோவை மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

கோவை மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 6, 2025

கொலு பொம்மை கண்காட்சி !

image

கோவை டவுன்ஹால் அருகே உள்ள மணிக்கூண்டு பகுதியில், தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில், கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் குத்துவிளக்கு ஏற்றித் துவக்கி வைத்தார். பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான பொம்மைகளை ஆர்வத்துடன் பார்வையிட்டார்.

error: Content is protected !!