News September 6, 2025

ராணிப்பேட்டை: PHONE தொலைந்தால் என்ன செய்யலாம்?

image

ராணிப்பேட்டை மக்களே, உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே <<>>கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News September 6, 2025

சோளிங்கர்: சந்திர கிரகணம் – கோவில் நடை சாற்றப்படும்

image

சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலில், செப்.7 அன்று நடைபெற உள்ள சந்திர கிரகணத்தை முன்னிட்டு, மாலை 4 மணிக்கு யோக நரசிம்மர் மற்றும் யோக ஆஞ்சநேயர் ஆலயங்களின் நடைகள் சாத்தப்படும். அதே சமயம், ஊர்கோவில் மாலை 5 மணிக்கு நடை சாத்தப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. செப்.8 அன்று வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு பூஜைகள் மற்றும் தரிசனங்கள் நடைபெறும்

News September 6, 2025

ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு கூட்டம்

image

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்துத்துறை அரசுப் பணியாளர்களுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் தலைமை தாங்கி, பங்கேற்ற அரசு பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசுகையில், இந்த பயிற்சி வகுப்பினை பணியாளர்கள் அனைவரும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

News September 6, 2025

காவலர் தினம் வாழ்த்து தெரிவித்த எஸ்.பி

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு காவலர் தினம் இன்று (செப்.6 ) கொண்டாடப்படுகிறது. காவலர் பணியில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் காவலர்களுக்கு ஊக்குவிக்கும் வண்ணமாக ஆண்டுதோறும் தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் காவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

error: Content is protected !!