News September 6, 2025
தேனி: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

தேனி மக்களே, நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம்.(அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். SHARE IT
Similar News
News March 11, 2026
தேனி; கட்சி தாவிய முக்கியப் புள்ளி

தேனி மாவட்டம், கம்பம் அதிமுக ஒன்றிய பொருளாளரான வழக்கறிஞர் பரணி இன்று ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். மேலும் அவருக்கு MLA மகாராஜன், திமுக கட்சி வேஷ்டியை கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்வின் போது பேரூர் செயலாளர் சரவணன், பேரூர் துணைச் செயலாளர் தங்கமாரி மற்றும் பல திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
News March 11, 2026
தேனி : திருமணமாகாத விரக்தியில் இளைஞரின் விபரீத முடிவு

பெரியகுளம் அருகே தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (46). இவருக்கு தற்போது வரை திருமணம் நடைபெறவில்லை. திருமணம் நடைபெறாத காரணத்தினால் மன வருத்தத்தில் இருந்து வந்த முருகேசன் நேற்று முன்தினம் (மார்.9) விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 10, 2026
தேனி: ரூ.15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்


