News September 6, 2025

தென்காசியில் நாளை 108 ஆம்புலன்சுக்கு ஆட்கள் தேர்வு

image

தென்காசி அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ்க்கு ஆட்கள் தேர்வு முகாம் நாளை (செப். 7) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதில், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம் எனவும், ; மேலும் விவரங்களுக்கு 7397724825, 7397724853 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 13, 2026

தென்காசி: எங்களின் கோரிக்கை ஏற்கும் கட்சிக்கு ஆதரவு-பேட்டி

image

திருவாரூரில் மே 5ம் தேதி வணிகர் சங்க மாநாடு நடைபெறுவதையொட்டி நேற்று ஆலங்குளத்தில் வியாபாரிகள் சங்கங்களின் பேரமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். அதில் தமிழக சட்டமன்ற தோ்தலுக்கு வியாபாரிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து எழுத்து பூா்வமாக ஒப்புதல் அளிக்கும் கட்சிக்கு சங்க நிா்வாகிகளுடன் ஆலோசித்து வியாபாரிகள் சங்கம் ஆதரவு அளிக்கும் என்று கூறினார்.

News March 12, 2026

தென்காசி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

தென்காசி: உங்களைத் தேடிவரும் பெட்ரோல்!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!