News September 6, 2025

கோயம்பேடு மெட்ரோ-க்கு வெடிகுண்டு மிரட்டல்

image

கோயம்பேடில், மெட்ரோ ரயில் நிலைய அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று தொலைபேசி வாயிலாக பேசிய மர்மநபர், மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பின், வெடிகுண்டு இல்லை என உறுதியானது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News

News September 6, 2025

சென்னை: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க

image

சென்னை மக்களே, உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<> இங்கே<<>> கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணு

News September 6, 2025

BREAKING போரூரில் பயங்கர விபத்து: சிறுமி பலி

image

சென்னை, போரூரில் மணல் ஏற்றி வந்த லாரி மோதியதில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கால்பந்தாட்ட பயிற்சிக்கு 2 சிறுமிகளை கல்லூரி மாணவி சாரதா பைக்கில் அழைத்து சென்ற போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சாரதா, மற்றொரு சிறுமி காயம் அடைந்த நிலையில் 10-வயது சிறுமி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News September 6, 2025

JUST IN: திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது

image

சென்னை, நெற்குன்றத்தை சேர்ந்த வரலட்சுமி என்பவர் பேருந்தில் பயணம் செய்த போது 4 சவரன் நகை திருடு போனதாக போலீசாரிடம் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வந்ததில், திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாரதி மீது 10 திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!