News September 6, 2025
சனிக்கிழமையில் அனுமனை இப்படி வழிபடுங்கள்

அனுமனுக்கு மிகவும் உகந்த தினமான சனிக்கிழமையில் அவரின் முழு அருள் பெற, சில வழிபாட்டு முறைகள் உள்ளது. வீட்டின் அருகில் இருக்கும் அனுமன் கோயிலுக்கு சென்று மனதார பிரார்த்தியுங்கள். மேலும், 27 வெற்றிலையை மாலையாக கோர்த்து அதனை அனுமனுக்கு அணிவித்து, மனதில் உள்ள கோரிக்கையை அவரிடம் வையுங்கள். உங்களுக்கான நல்வழியை அனுமன் காட்டுவார். ஜெய் அனுமன்! SHARE IT.
Similar News
News March 22, 2026
மண்டியிடாமல் மானத்தோடு செயல்படுவேன்: வேல்முருகன்

திமுக, பெரியண்ணன் மனப்பான்மையுடன் தங்களை அணுகியதால் சுயமரியாதைக்காக <<19446966>>கூட்டணியிலிருந்து விலகியதாக<<>> வேல்முருகன் தெரிவித்துள்ளார். அதிக தொகுதிகள் வழங்கவில்லை என்பதற்காக மட்டும் கூட்டணியிலிருந்து விலகவில்லை; மண்டியிடாமல் மானத்தோடு செயல்படவே விலகியதாகவும் கூறியுள்ளார். சமூக நீதி பேசும் திமுக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு, தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 22, 2026
காய்கறி விலை கடும் சரிவு.. விவசாயிகள் கண்ணீர்!

சென்னை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், நெல்லை என முக்கிய சந்தைகளில் காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது. குறிப்பாக கோயம்பேட்டில் 1 கிலோ பீன்ஸ் – ₹20, பீட்ரூட், கத்திரிக்காய், கேரட் தலா ₹10, முருங்கைக்காய் – ₹30, பெரிய வெங்காயம் – ₹10, சாம்பார் வெங்காயம் – ₹20, நாட்டு தக்காளி ₹12-க்கு விற்பனையாகிறது. இந்த விலை குறைவால் அறுவடை கூலி கூட கிடைப்பதில்லை என விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
News March 22, 2026
கரூர் பிரசாரத்தில் விஜய் ஷூட்டிங்கா? ஆதவ் பரபரப்பு

கரூர் பிரசார கூட்டத்தில் விஜய், ஜன நாயகன் பட ஷூட்டிங் நடத்தியதாகவும், அது தொடர்பாக CBI அவரிடம் கேள்வி எழுப்பியதாகவும் SM-ல் வீடியோ ஒன்று பரவி வருகிறது. இது தொடர்பாக ஆதவ் அர்ஜுனா மெளனம் களைத்துள்ளார். RK நகரில் பேசிய அவர், அதிமுகவுடன் கூட்டணிக்கு செல்லவில்லை என்றவுடன் கொடூரமான மனநிலையில் இப்படி ஒரு பிரசாரத்தை உருவாக்குகின்றனர். எனக் குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் உங்கள் கருத்து என்ன?


