News September 6, 2025
சோனியா காந்தி மீது வழக்கு பதிய கோரி மனு

காங்.,ன் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு தேசிய அளவில் பேசுபொருளாக உள்ளது. இந்நிலையில், 1983-ல் இந்திய குடியுரிமை பெற்ற சோனியா காந்தியின் பெயர், 1980-லேயே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக, விகாஸ் திரிபாதி என்பவர் டெல்லி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். எனவே, சோனியா காந்தி மீது வழக்கு பதிய உத்தரவிட வேண்டும் என அவர் கோரியுள்ளார். இதன் மீதான விசாரணை, செப்.10-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 11, 2026
ஆவடி வருகிறார் சாட்டை துரைமுருகன்!

நாம் தமிழர் கட்சியின் ஆவடி தொகுதி வேட்பாளர் அறிமுகம் பொதுக் கூட்டம் வரும் மார்ச் 13ஆம் தேதி ஆவடி அடுத்த பட்டாபிராம் காவல் நிலையம் அருகே நடைபெற உள்ளது. இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் , மாநில இளைஞர் பாசறை ஒருங்கிைைணப்பாளர் சா.பாத்திமா பர்ஹானா கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
News March 11, 2026
தினமும் தேங்காய் பால் குடிப்பதால் என்ன ஆகும்?

தினமும் தேங்காய் பால் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. ➤நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும், அடிக்கடி ஏற்படும் சளி, நுரையீரல் பிரச்னைகள் சரியாகும், வயிற்றுப் புண், வயிற்றுப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். ➤இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் & இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. ➤பால் ஒவ்வாமை இல்லாதவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் இதை குடிக்க வேண்டும் என டாக்டர்கள் சொல்றாங்க. SHARE.
News March 11, 2026
பத்தாயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கட்!

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் பங்கேற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தை நடைபெற்றதை அடுத்து ஜன.31- ம் தேதியுடன் போராட்டத்தை ஆசிரியர்கள் வாபஸ் பெற்றனர். எனினும் அரசு அறிவுறுத்தியும் இன்னும் தங்களின் ஜனவரி மாத சம்பளம் கிடைக்காதது சுமார் 10,000-க்கும் அதிகமான ஆசிரியர்களிடையே அதிருப்தியை அளித்துள்ளது.


