News September 6, 2025
CSK நிச்சயம் கம்பேக் கொடுக்கும்: கேப்டன் ருதுராஜ்

காயத்தால் 2025 IPL தொடரில் இருந்து வெளியேறிய பிறகு களமிறங்கிய மாற்று வீரர்கள் உடன், தானும் இணைந்து 2026 சீசனில் வெற்றி பெறுவோம் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். தோனியின் ஆதரவுடன் இது நிச்சயம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த சீசனில் கடைசி இடத்திற்கு CSK தள்ளப்பட்ட நிலையில், ஆயுஷ் மாத்ரே, பிரேவிஸ், உர்வில் படேல் ஆகியோர் உடன் சென்னை அணி கம்பேக் கொடுக்கும் என தோனி கூறியிருந்தார்.
Similar News
News September 6, 2025
SIIMA 2025: விருதுகளை குவித்த படங்கள் க்ளிக்ஸ்

தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் SIIMA விருதுகள் விழா செப்.5&6-ல் துபாயில் நடைபெற்றது. தெலுங்கில், புஷ்பா-2 படத்திற்காக மொத்தம் 4 விருதுகளும், கல்கி படத்திற்கு மொத்தம் 4 விருதுகளும் வழங்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் கல்கி படத்திற்காக சிறந்த வில்லன் விருதை பெற்றிருக்கிறார். விருதுகளை வாங்கியவர்களின் பட்டியலை தெரிந்துகொள்ள SWIPE பண்ணுங்க.
News September 6, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப்.6) ஒரே நாளில் சவரனுக்கு ₹1,120 உயர்ந்துள்ளது. இதனால், வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹10,005-க்கும், சவரன் ₹80,040-க்கும் விற்பனையாகிறது. இதனால், நடுத்தர வர்க்கத்தினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்ட்ல சொல்லுங்க.
News September 6, 2025
குழந்தைகள் போனை தூரம் வைக்க இத பண்ணுங்க!

குழந்தைகளும் தற்போது போனுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்த பழக்கத்தை கைவிட, இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துங்க : பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன், போன்களை உபயோகப்படுத்துவதை குறைக்க வேண்டும். பெற்றோர் செய்வதை தான் பிள்ளைகள் பின்பற்றுவார்கள் *வீட்டுக்குள் கட்டிப்போட வேண்டாம். ஏரியாவில் இருக்கும் குழந்தைகளுடன் வெளியில் சென்று விளையாடுவதை ஊக்குவியுங்கள் *ஏதாவது கலை திறனில் அவர்களை ஈடுபடுத்துங்கள். SHARE IT.