News September 6, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 6, 2025
தஞ்சாவூர்: பட்டாவில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி!

தஞ்சை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04362 231045 அணுகலாம். SHARE பண்ணுங்க!
News September 6, 2025
செப் 9 தஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

தஞ்சை ஆட்சியரகத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் செப் 9 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம் நடைபெறுகிறது,. மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படங்கள், இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News September 6, 2025
தஞ்சை மாவட்டத்தில் இன்று பவர் கட் !

தஞ்சாவூரில் இயங்கி வரும் துணை மின் நிலையங்களில் இன்று செப்.06 ஆம் தேதி
⏩தஞ்சாவூர்,
⏩பாபநாசம்,
⏩அய்யம்பேட்டை,
⏩மெலட்டூர்,
⏩சாக்கோட்டை,
⏩கும்பகோணம் ரூரல்,
⏩ பூண்டி,
⏩சாலையாமங்கலம்,
⏩திருப்புறம்பியம்
ஆகிய பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களும் SHARE பண்ணுங்க!