News September 6, 2025
தர்மபுரியில் இலவச கண் சிகிச்சை முகாம் அறிவிப்பு.

தருமபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் தர்மபுரி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இன்று (செப்டம்பர் 6) தர்மபுரி – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ரோட்டரி சங்கத்தில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண் சிவத்தல் போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுகிறது.
Similar News
News September 6, 2025
தர்மபுரி: டிகிரி போதும் கிராம வங்கியில் வேலை

தமிழ்நாடு கிராம வங்கி போன்ற RRB கிராம வங்கிகளில் ஆபீசர்கள் மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட்டுகள் பணி காலியாக உள்ளது. மொத்தம் 13,217 காலிப்பணியிடங்கள் உள்ளது. 18-40 வயதிற்குஉப்பட்ட டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த <
News September 6, 2025
தர்மபுரி: டிகிரி போதும் கிராம வங்கியில் வேலை

கிராம வங்கியில் ஆபீசர்கள் மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட்டுகள் பணிக்கு கட்டாயம் உள்ளூர் மொழி எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். பிரிலிமினரி தேர்வு, மெயின்ஸ் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விபரங்களுக்கு <
News September 6, 2025
தர்மபுரி: தொப்பூர் கணவாய்க்கு எண்டு கார்டு

கொலைகார கணவாய் எனப்படும் தொப்பூர் கணவாயில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க தற்போது மலைப்பாதையில் உயர்மட்ட மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. 905 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. எச்சரிக்கை, வேகத்தடை, ரவுண்டானா போன்ற நடவடிக்கைகள் மூலம் விபத்துக்கள் ஓரளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில், உயர்மட்ட பாலம் தொப்பூருக்கு தீர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


