News September 6, 2025
இவைதான் இந்தியாவின் விலை உயர்ந்த விஷயங்கள்!

பொதுவாக உலகளவில் பிராண்டட் பொருள்களின் விலை அதிகமாக இருக்கும். ஆனால், இந்தியாவை பொறுத்தவரை அவை சற்று மாறுபடுகின்றன. இங்கு கழுதைப்பாலில் தொடங்கி தேயிலை வரை, அதன் சிறப்புத் தன்மை காரணமாக அதிக விலைக்கு விற்பனையாகின்றன. அந்தவகையில், இந்தியாவில் அதிகவிலை கொண்ட பொருள்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். இதில் உங்களை ஆச்சரியப்படுத்தியதை கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News September 6, 2025
ரஷ்யாவிடமே இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும்: நிர்மலா

தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக டிரம்ப் கூறியிருந்தார். கச்சா எண்ணெய் மட்டுமல்ல, எந்த பொருள்கள் வாங்க வேண்டும் என்றாலும், அதனை வாங்கும் முடிவை இந்தியாவே எடுக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். விலை, கொண்டுவரப்படும் செலவு உள்ளிட்டவற்றில் எங்கு வாங்கினால் பலன் கிடைக்குமோ, அங்குதான் இந்தியா பொருட்களை வாங்கும் என்றார்.
News September 6, 2025
Week-endல ரொம்ப நேரம் தூங்குறீங்களா?

உடல் ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியம் என்ற போதிலும், வேலை பளுவால் தூக்கம் பாதிக்கிறது. குறைவான தூக்கம் பக்கவாதம், மாரடைப்பு ஆகிய பிரச்னைக்கு வழிவகுக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, Week-endல் அதிக நேரம் தூங்குவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் எனவும் அறிவுறுத்துகின்றனர். ஆகவே, இனி Weekendல் நைட் ஃபுல்லா ஊர் சுற்றுவதை குறைத்துக்கொண்டு, நல்லா தூங்கி மார்னிங் லேட்டாக எழுந்துக்கோங்க!
News September 6, 2025
மதராஸி நாயகி ருக்மினி வசந்த் கிளிக்ஸ்

‘ரெட் வெல்வட்’ கேக் போல் மின்னும் போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் ருக்மினி வசந்த். விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படம் மூலமே தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், நேற்று வெளியான ‘மதராஸி’ வாயிலாக அனைத்து தரப்பட்ட ரசிகர்களிடமும் சென்று சேர்ந்துள்ளார் என்றே கூறலாம். தொடர்ந்து ‘காந்தாரா: சாப்டர்1’ படத்திலும் அவர் நடித்து வருகிறார். மதராஸியில் ருக்மினியின் நடிப்பு எப்படி இருக்கிறது?