News September 6, 2025
ராசி பலன்கள் (06.09.2025)

➤ மேஷம் – போட்டி ➤ ரிஷபம் – நன்மை ➤ மிதுனம் – மேன்மை ➤ கடகம் – பிரீதி ➤ சிம்மம் – களிப்பு ➤ கன்னி – வெற்றி ➤ துலாம் – ஆர்வம் ➤ விருச்சிகம் – பரிவு ➤ தனுசு – தனம் ➤ மகரம் – அனுகூலம் ➤ கும்பம் – புகழ் ➤ மீனம் – உயர்வு.
Similar News
News September 6, 2025
Week-endல ரொம்ப நேரம் தூங்குறீங்களா?

உடல் ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியம் என்ற போதிலும், வேலை பளுவால் தூக்கம் பாதிக்கிறது. குறைவான தூக்கம் பக்கவாதம், மாரடைப்பு ஆகிய பிரச்னைக்கு வழிவகுக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, Week-endல் அதிக நேரம் தூங்குவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் எனவும் அறிவுறுத்துகின்றனர். ஆகவே, இனி Weekendல் நைட் ஃபுல்லா ஊர் சுற்றுவதை குறைத்துக்கொண்டு, நல்லா தூங்கி மார்னிங் லேட்டாக எழுந்துக்கோங்க!
News September 6, 2025
மதராஸி நாயகி ருக்மினி வசந்த் கிளிக்ஸ்

‘ரெட் வெல்வட்’ கேக் போல் மின்னும் போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் ருக்மினி வசந்த். விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படம் மூலமே தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், நேற்று வெளியான ‘மதராஸி’ வாயிலாக அனைத்து தரப்பட்ட ரசிகர்களிடமும் சென்று சேர்ந்துள்ளார் என்றே கூறலாம். தொடர்ந்து ‘காந்தாரா: சாப்டர்1’ படத்திலும் அவர் நடித்து வருகிறார். மதராஸியில் ருக்மினியின் நடிப்பு எப்படி இருக்கிறது?
News September 6, 2025
ஆக்ஸ்போர்டு அறிவாலயத்தில் ஜி.யு.போப்: ஸ்டாலின் புகழாரம்

அரசு முறை பயணமாக லண்டன் சென்றுள்ள CM ஸ்டாலின், ஜி.யு.போப் கல்லறையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக அவரது X பதிவில், 19 வயதில் தமிழகம் வந்த போப், தமிழ் சுவையை உலகறியச் செய்ய திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் என குறிப்பிட்டுள்ளார். ஆக்ஸ்போர்டு அறிவாலயத்தில் ஒரு பேராசிரியராக தமிழ்த் தொண்டாற்றியதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.