News September 5, 2025
உக்ரைனுக்கு வரும் வெளிநாட்டு படைகள்.. புடின் எச்சரிக்கை

உக்ரைனுக்கு மற்ற நாடுகள் படைகளை அனுப்பினால், ரஷ்ய ராணுவத்தின் முதல் குறியாக அவை இருக்கும் என புடின் எச்சரித்துள்ளார். ஐரோப்பா உடனான உக்ரைனின் ராணுவ தொடர்பே இப்போருக்கு முக்கிய காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு படைகளை அனுப்ப 26 நாடுகள் ஒப்புக் கொண்ட நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இத்தகைய பதற்றங்கள் 3-ம் உலகப் போருக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
Similar News
News March 11, 2026
BREAKING: விவசாயிகளுக்கு ₹2,000.. அரசு அறிவிப்பு

PM KISAN திட்டத்தின் 22-வது தவணைத் தொகை நாளை மறுநாள் (மார்ச் 13) விடுவிக்கப்படும் என சற்றுமுன் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அசாம் கவுகாத்தியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கான ₹19,000 கோடியை PM மோடி விடுவிக்க உள்ளார். இதன்மூலம், 9.35 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில் தலா ₹2,000 டெபாசிட் செய்யப்பட உள்ளது. SHARE IT
News March 11, 2026
மதுவை திணிக்கும் திமுக அரசு: அன்புமணி

தமிழகத்தில் மது கலாசாரத்தால் குற்றங்கள் அதிகரித்து விட்டதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். திருச்சி NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறியுள்ளார். திமுக அரசு மதுவை விற்கவில்லை மாறாக திணிக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும், மதுவால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
News March 11, 2026
சருமத்தை Detox செய்வது எப்படி?

பளபளப்பான சருமத்தைப் பெற கெமிக்கல் நிறைந்த காஸ்மெடிக் பொருள்களை விடுத்து பின்வரும் இயற்கையான டீடாக்ஸ் முறைகளை பின்பற்றலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். ➤தினமும் 2.5 லி நீர் அருந்துங்கள் ➤சர்க்கரை, பால் உணவுகளை குறைத்துக்கொள்ளுங்கள் ➤ஆவாரம் டீ, மஞ்சள் டீ போன்றவை பருகுங்கள் ➤புரோபயாடிக் & நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE.


