News September 5, 2025
திமுக, அதிமுகவுக்கு எதிராக விஜய் போடும் மெகா பிளான்

திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு எதிராக முழுவீச்சில் களமாடத் தயாராகி வருகிறார் விஜய். செப்.13-ல் முதல் மக்கள் சந்திப்பை தொடங்க திட்டமிட்டுள்ள அவர், மெகா பிளான் போட்டு வைத்துள்ளாராம். முதல்கட்டமாக 100 தொகுதிகளுக்கு சென்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. விவசாயிகள், பெண்கள், தொழிலதிபர்களை சந்தித்து குறைகளை கேட்டறியவும் அவர் ஏற்பாடு செய்து வருகிறார். விஜய்யின் வியூகம் எடுபடுமா?
Similar News
News September 6, 2025
சோனியா காந்தி மீது வழக்கு பதிய கோரி மனு

காங்.,ன் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு தேசிய அளவில் பேசுபொருளாக உள்ளது. இந்நிலையில், 1983-ல் இந்திய குடியுரிமை பெற்ற சோனியா காந்தியின் பெயர், 1980-லேயே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக, விகாஸ் திரிபாதி என்பவர் டெல்லி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். எனவே, சோனியா காந்தி மீது வழக்கு பதிய உத்தரவிட வேண்டும் என அவர் கோரியுள்ளார். இதன் மீதான விசாரணை, செப்.10-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
News September 6, 2025
அஜித் படத்துக்கு எதிராக இளையராஜா வழக்கு

அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில், இளையராஜா இசையில் வெளியான பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருந்தது. இதை அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாக ₹5 கோடி இழப்பீடு கேட்டு இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பாடல் உரிமையாளரிடம் அனுமதி பெறப்பட்டதாக பட தயாரிப்பு நிறுவனம் பதிலளித்தது. இந்நிலையில், HC-ல் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த உரிமையாளர் யார் என்றும் அவர் கேட்டுள்ளார்.
News September 6, 2025
கண்ணதாசன் பொன்மொழிகள்

*தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால், பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.
*யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே; ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்.
*அழும் போது தனிமையில் அழு, சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி, கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள், தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.