News September 5, 2025
நல்லாசிரியர் விருது பெற்ற திருக்கோவிலூர் ஆசிரியர்

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில், சிறந்த ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது, திருக்கோவிலூர் கபிலர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பாலா அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த விருதை ஆசிரியருக்கு வழங்கி கவுரவித்தார்.
Similar News
News September 6, 2025
கள்ளக்குறிச்சி: இந்த நம்பர் உங்க கிட்ட இருக்கா…?

கள்ளக்குறிச்சி: உடல் நிலை சரியில்லாத போது (அ) உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு செல்வதுண்டு. அப்படி போகையில் அங்கிருப்பவர்கள் சரியாக பதிலளிக்காமல் அலைக்கழிக்கிறார்களா.? சிகிச்சையில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா.? மருத்துவமனையில் உள்ள பிரச்சனைகளை யாரிடம் சொன்னாலும் சரியான தீர்வு கிடைக்கவில்லையா.?உடனே இந்த நம்பருக்கு (04151- 222192) கால் பண்ணி புகார் பண்ணுங்க உடனே நடவடிக்கை எடுப்பாங்க. ஷேர்
News September 6, 2025
கள்ளக்குறிச்சி முற்றிலும் இலவசம்! SUPER NEWS!

கள்ளக்குறிச்சி மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க இங்கே <
News September 6, 2025
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் காய்கறிகளின் இன்றைய செப்டம்பர் 6 விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி 1கிலோ மதிப்பீட்டில் தக்காளி ரூபாய் 30 பிரண்டை ரூ.60 உருளைக்கிழங்கு ரூபாய் 30 முள்ளங்கி ரூ.30 வெண்டை ரூ.40 கத்தரிக்காய் ரூ.40 அவரது ஆயிரம் ரூ.50 முருங்கைக்காய் ரூ.35 சுரைக்காய் ரூ. 20 புடலங்காய் ரூ.40 பச்சை மிளகாய் ரூ.25 விற்பனை ஆகிறது என்று நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.