News September 5, 2025
சச்சின் மகளுக்கு நிச்சயதார்த்தம்?

சச்சினின் மகள் சாரா டெண்டுல்கரின் நிச்சயதார்த்தம் தொடர்பான செய்தி வைரலாகி வருகிறது. கோவாவைச் சேர்ந்த ரெஸ்டாரண்ட் ஓனர் சித்தார்த் உடன் சாரா நெருக்கமாக எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை குறிப்பிட்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இதுகுறித்து சச்சின் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
Similar News
News September 6, 2025
GST வரியால் வருவாய் இழப்பு: கார்கே வலியுறுத்தல்

GST வரி குறைப்பால் வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு, அந்த இழப்பை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு ஈடு செய்ய வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். GST 2.0-வை வரவேற்பதாக தெரிவித்த அவர், 8 ஆண்டுகளாக தூக்கத்தில் இருந்த மோடி அரசு, தற்போது விழித்துக்கொண்டு ஜிஎஸ்டியை மறுசீரமைத்துள்ளதாக சாடினார். இதற்காக 10 ஆண்டுகளாக காங்., போராடி வந்ததாகவும் கூறியுள்ளார்.
News September 6, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல். ▶குறள் எண்: 450 ▶குறள்: பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் ▶ பொருள்: நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.
News September 6, 2025
அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? SK நச் பதில்

தமிழ் சினிமாவில் ‘அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?’ என்ற கேள்வி இன்னும் ஓய்ந்தபாடில்லை. தற்போது சிவகார்த்திகேயனிடமும் இதுகுறித்து கேட்க, ‘எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான்’ என பதிலளித்தார். ஏற்கெனவே தனது ரோல் மாடல் ரஜினி என ‘மதராஸி’ பட விழாக்களில் அடிக்கடி அவர் கூறி வந்தார். அதேநேரம், துப்பாக்கியை கையில் கொடுத்த விஜய் பற்றியும் கேள்வி SK-வை சூழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.