News September 5, 2025
BREAKING: பூவை செங்குட்டுவன் காலமானார்

ஆயிரக்கணக்கான சினிமா பாடல்களை எழுதிய பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன்(90) காலமானார். வயது மூப்பால் சென்னை பெரம்பூரில் இன்று அவரது உயிர் பிரிந்தது. ஏராளமான ஹிட் பாடல்களை இவர் எழுதியுள்ளார். ‘நான் உங்கள் வீட்டு பிள்ளை’, ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’, ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ உள்ளிட்ட பாடல்கள் முக்கியமானவை. RIP
Similar News
News September 6, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல். ▶குறள் எண்: 450 ▶குறள்: பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் ▶ பொருள்: நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.
News September 6, 2025
அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? SK நச் பதில்

தமிழ் சினிமாவில் ‘அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?’ என்ற கேள்வி இன்னும் ஓய்ந்தபாடில்லை. தற்போது சிவகார்த்திகேயனிடமும் இதுகுறித்து கேட்க, ‘எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான்’ என பதிலளித்தார். ஏற்கெனவே தனது ரோல் மாடல் ரஜினி என ‘மதராஸி’ பட விழாக்களில் அடிக்கடி அவர் கூறி வந்தார். அதேநேரம், துப்பாக்கியை கையில் கொடுத்த விஜய் பற்றியும் கேள்வி SK-வை சூழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
News September 6, 2025
பேரிடர் பாதித்த இடங்களை ஆய்வு செய்யும் PM மோடி

வட இந்தியாவில் ஏற்பட்ட மேகவெடிப்பு & வரலாறு காணாத கனமழையால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட இமாச்சல், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களை விரைவில் நேரில் பார்வையிட உள்ளதாக PM அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, பேரிடர் நிவாரணம் குறித்து அவர் ஆலோசனை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.