News September 5, 2025
ராணி கேத்தரின் காலமானார்

பிரிட்டன் அரசக் குடும்பத்தின் மூத்த உறுப்பினரான கென்ட் சீமாட்டி என்று அழைக்கப்படும் கேத்தரின் (92) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவர் அமைதியான முறையில் இயற்கை எய்தியதாக அரசக் குடும்பம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பேரனும், கென்ட் இளவரசருமான எட்வர்டை மணந்தவர் தான் கேத்தரின். பல அறப்பணிகளை இவர் செய்து வந்தார். RIP!
Similar News
News September 6, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 6, ஆவணி 21 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சதுர்தசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை
News September 6, 2025
FIDE Grand Swiss: டிராவில் முடித்த குகேஷ்

உஜ்பெகிஸ்தானில் FIDE Grand Swiss 2025 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஓபன் பிரிவில் இந்தியாவின் டி குகேஷ், துருக்கியின் யாகிஷ் கான் எர்டோக்மஸ் உடனான விளையாட்டை டிராவில் முடித்தார். அதேநேரம், ஹாலந்தின் எலின் ராபர்ஸ் உடனான 2-வது சுற்றில் வைஷாலி வெற்றி பெற்றார். பிரக்ஞானந்தா, FIDE கொடியுடன் விளையாடிய இவான் ஜெலன்ஸ்கியை தோற்கடித்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.
News September 6, 2025
விஜய் களத்திற்கு வந்தபின் இது நடக்கும்: அண்ணாமலை

தமிழகத்தில் அடுத்த 6 மாத காலத்தில் பல அரசியல் மாற்றங்கள் நிகழும் என பாஜகவின் அண்ணாமலை தெரிவித்துள்ளார். விஜய் போன்றவர்கள் களத்திற்கு வந்த பிறகு பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என அண்ணாமலை அண்மையில் கூறி இருந்தார். விஜய் குறித்த அவரது கருத்தை எப்படி பார்க்குறீங்க?