News September 5, 2025
சந்திர கிரகணம்.. 5 ராசியினருக்கு எச்சரிக்கை

நாளை மறுநாள்(செப்.7) நிகழும் சந்திர கிரகணத்தால் 5 ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். *ரிஷபம்: உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு. *மிதுனம்: குடும்ப வாழ்க்கையில் நிம்மதி குறையும். *சிம்மம்: தொழில் பார்ட்னருடன் பிரச்னை வரலாம். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். *துலாம்: நிதிநிலை வீழ்ச்சி அடையும். சேமிப்பு குறையும். *கும்பம்: எதிர்பாராத செலவு, விபத்து ஏற்படலாம்.
Similar News
News September 6, 2025
₹1.45 லட்சம் வரை கார்களின் விலையை குறைத்த டாடா!

GST 2.0 எதிரொலியாக கார்களின் விலையை ₹65,000 முதல் ₹1.45 லட்சம் வரை குறைக்க உள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. சிறிய கார் மாடல்களான Tiago – ₹75,000, Tigor – ₹80,000, Altroz – ₹1.10 லட்சம், CurVV – ₹65,000 என விலை குறைக்கப்பட உள்ளது. அதேபோல், SUV மாடல்களான Harrier – ₹1.4 லட்சம், Safari – ₹1.45 லட்சம் விலை குறைக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
News September 6, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 6, 2025
டைரக்டருடன் மோதல்.. ‘மகுடம்’ படத்தை இயக்கும் விஷால்?

விஷாலின் ‘மகுடம்’ பட ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின், 3-வது கட்ட படப்பிடிப்பு நேற்று தொடங்கிய நிலையில், இயக்குநர் ரவி அரசு ஸ்பாட்டில் இல்லாதது பல்வேறு யூகங்களை எழுப்பியது. டைரக்டருடன் மோதலால், விஷாலே இப்படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால், தனிப்பட்ட காரணங்களால் ரவி அரசால் வரமுடியவில்லை எனவும், அடுத்த 2 தினங்களில் வந்துவிடுவார் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.