News September 5, 2025
கள்ளக்குறிச்சி: தேர்வு இல்லை; உள்ளூரில் அரசு வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் இரவு காவலர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கிடையாது, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.71,900 வரை வழங்கப்படும். <
Similar News
News September 6, 2025
விபத்தில் தாய் உயிரிழப்பு – மகன் காவல்நிலையத்தில் புகார்

சாமநத்தம், செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகே நடந்த சாலை விபத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த குமுதா (55) என்பவர் உயிரிழந்தார். அவரது கணவர் ராஜன் ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விளம்பர பலகையில் மோதியதில் விபத்து ஏற்பட்டது. உயிரிழந்த குமுதாவின் மகன் சாம்நாத் அளித்த புகாரின் பேரில், உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 6, 2025
மூன்றாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுமுறை

உளுந்தூர்பேட்டை நீதிமன்ற இளநிலை உதவியாளர் ரஞ்சிதாவுக்கு மூன்றாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி சென்னை உயர் நீதிமன்றம் விடுப்பு வழங்க உத்தரவிட்டது. மூன்றாவது பிரசவத்திற்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது என நீதிபதி சுப்பிரமணியன் கருத்து தெரிவித்தார்.
News September 5, 2025
இரவு நேர ரோந்து பணி விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (செப்டம்பர் 5-ம் தேதி ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.