News September 5, 2025
காலடி வைக்காதே.. EPSக்கு எச்சரிக்கை

EPS-ஐ எச்சரித்து தேனி மாவட்டம் முழுக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போடியில் இன்று EPS பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த நிலையில் தேனியில் காலடி வைக்காதே என்று, குறிப்பிட்ட ஒரு பேரவை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. அதில், எங்களை வஞ்சிக்கும் உங்களுக்கு இந்த மண்ணில் என்ன வேலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இன்று காலை EPS விவசாயிகளுடனான சந்திப்பை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 6, 2025
டைரக்டருடன் மோதல்.. ‘மகுடம்’ படத்தை இயக்கும் விஷால்?

விஷாலின் ‘மகுடம்’ பட ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின், 3-வது கட்ட படப்பிடிப்பு நேற்று தொடங்கிய நிலையில், இயக்குநர் ரவி அரசு ஸ்பாட்டில் இல்லாதது பல்வேறு யூகங்களை எழுப்பியது. டைரக்டருடன் மோதலால், விஷாலே இப்படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால், தனிப்பட்ட காரணங்களால் ரவி அரசால் வரமுடியவில்லை எனவும், அடுத்த 2 தினங்களில் வந்துவிடுவார் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
News September 6, 2025
ஆபரேஷன் சிந்தூரில் முழு சுதந்திரம் கிடைத்தது: தளபதி

ஆபரேஷன் சிந்தூரின் போது அழிக்க வேண்டிய இலக்குகளை தேர்ந்தெடுப்பதில் முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாக தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார். சீனா உடனான எல்லை பிரச்னை, பாக்., உடனான மறைமுக போர் நமக்கு மிகப்பெரிய சவால் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், நமது 2 எதிரிகளும் அணு ஆயுத வல்லமை படைத்தவர்கள் எனவும், இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பது சவால் நிறைந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
News September 6, 2025
பாண்ட்யா சகோதரர்களின் நல்ல எண்ணம்

பாண்ட்யா சகோதரர்கள் செய்த நல்ல காரியங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தங்களது சிறுவயது பயிற்சியாளர் ஜிதேந்திர சிங்கிற்கு இருவரும் சேர்ந்து ₹80 லட்சம் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஜிதேந்திர சிங் கூறும்போது, ₹20 லட்சம் மதிப்பில் கார், சகோதரியின் திருமணத்திற்கு ₹20 லட்சம், தாயின் மருத்துவ செலவுகள் மற்றும் இதர செலவுகளுக்கு ₹18 லட்சம் தந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.