News April 10, 2024
திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

பாலக்கோடு கிழக்கு ஒன்றியத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பாமகவில் இருந்து 25க்கும் மேற்பட்டோர் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி EX.MLA அவர்களின் தலைமையில் திமுகவில் இணைந்து கொண்டனர். அப்போது, தர்மபுரி தொகுதி திமுக பார்வையாளர் த.ஆ.கா தருண் மற்றும் கட்சியினர் பலர் உடனிருந்தனர்.
Similar News
News March 11, 2026
தருமபுரி: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News March 11, 2026
தருமபுரிக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் தருமபுரி வருகை தந்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணிகளை ஆ.மணி எம்.பி., மு.அமைச்சர் பழனியப்பன் & மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதில் வாகன நிறுத்தம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.
News March 11, 2026
தருமபுரி: மாத்திரை மாறி உண்ட முதியவர் மரணம்

தருமபுரி அருகே உங்களானஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாதையன் (91) என்பவர், இருமல் மாத்திரைக்குப் பதிலாகத் தவறுதலாக வேறு மாத்திரையை உட்கொண்டார். இதனால் வாயில் நுரை தள்ளி மயங்கிய அவர், தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்கு பகிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


