News September 5, 2025
சென்னை: கடன் தொல்லை நீக்கும் மகா பைரவர்

சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் வழியில் மறைமலை நகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் உள்ளது. இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கினால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்தாலே ஆத்மா சுத்தமாகுமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Similar News
News September 6, 2025
சென்னையில் அர்ச்சகர் பயிற்சி சேர்க்கை தொடக்கம்

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி2025–2026ஆம் ஆண்டுக்கான ஓராண்டு வைணவ அர்ச்சகர் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. 14 முதல் 24 வயது வரையிலான, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். சேரும் மாணவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் மற்றும் மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆர்வமுள்ளோர் parthasarathy.hrce.tn.gov.i இந்த தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
News September 6, 2025
மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது!

உளுந்தூர்பேட்டையை சேர்ந்த, அரசு ஊழியர் ரஞ்சிதா 3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று (செப்.05) இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘3வது பிரசவத்திற்கு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது. குழந்தை பிறப்பின் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. எனவே சட்டப்படி விடுப்பு வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.
News September 5, 2025
கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்

கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் வயது (90) சென்னை பெரம்பூரில் இன்று மாலை காலமானார். இவர் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவர் பக்திப் பாடல்கள் எழுதுவதில் சிறந்தவர். 1967ஆம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள், 4000க் கும் மேற்பட்ட தனிப்பாடல்கள், 5,000க்கும் மேற்பட்ட பக்திப்பாடல்களை இவர் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.