News September 5, 2025
₹3,500 வழங்கும் புதிய திட்டம்?.. FACTCHECK

பிரதம மந்திரி வேலையில்லா உதவித்தொகை திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு ₹3,500 வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதாக செய்தி பரவி வருகிறது. குறிப்பிட்ட யூடியூப் சேனல் மூலம் இந்த செய்தி பகிரப்பட்டு வருவதாகவும், இதில் உண்மையில்லை என்றும் மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் (PIB FACTCHECH) விளக்கம் அளித்துள்ளது. தகவலின் உண்மையை அறிய 87997 11259 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News March 18, 2026
பழிவாங்காமல் விடமாட்டேன்: மொஜ்தபா கமேனி

அமெரிக்காவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா கமேனி மறுத்துள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக சில நாடுகள் பேசியதாக ஈரான் அதிகாரி ஒருவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால், இது சமாதானத்திற்கான நேரம் அல்ல. அமெரிக்காவும் இஸ்ரேலும் மண்டியிட்டு, தோல்வியை ஏற்றுக்கொண்டு, இழப்பீடு வழங்க வேண்டும் என மொஜ்தபா தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
News March 18, 2026
காலையில் டீ, காபிக்கு பதில் இதை அருந்தலாம்

காலையில் டீ, காபிக்கு பதிலாக மோரில் இஞ்சி, கருமிளகு, சீரகம் போன்றவற்றை சேர்த்து அருந்தலாம். ஒரு கிளாஸ் மோர் அருந்துவது சூட்டை தணித்து உடலை வறண்ட நிலையில் இருந்து பாதுகாக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். வெண்ணெய் நீக்கப்பட்ட தயிரில் மோர் தயாரிப்பது நல்லதாம். மோர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
News March 18, 2026
வரலாற்றில் இன்று

➤1662 – உலகின் முதல் பேருந்து சேவை பிரான்ஸில் தொடங்கியது. ➤1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி 6 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். ➤1965 – சோவியத் வீரர் அலெக்சி லியோனொவ், விண்வெளியில் நடந்த முதல் மனிதர் என்ற சாதனையை படைத்தார். ➤ 1989 – எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான பதனிடப்பட்ட உடல் பிரமிட் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டது.


