News September 5, 2025

உலக முதுகு தண்டுவட பாதிப்பு தின விழிப்புணர்வு பேரணி

image

கள்ளக்குறிச்சி நகர காவல் நிலையம் அருகில் உலக முதுகு தண்டுவட பாதிப்பு தின விழிப்புணர்வு பேரணியினை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News September 5, 2025

இரவு நேர ரோந்து பணி விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (செப்டம்பர் 5-ம் தேதி ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

News September 5, 2025

நல்லாசிரியர் விருது பெற்ற திருக்கோவிலூர் ஆசிரியர்

image

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில், சிறந்த ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது, திருக்கோவிலூர் கபிலர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பாலா அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த விருதை ஆசிரியருக்கு வழங்கி கவுரவித்தார்.

News September 5, 2025

கள்ளக்குறிச்சி: தேர்வு இல்லை; உள்ளூரில் அரசு வேலை

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் இரவு காவலர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கிடையாது, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.71,900 வரை வழங்கப்படும். <>இந்த லிங்க்<<>> மூலம் வரும் செப்.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் <<17623228>>விபரங்களுக்கு இங்கு<<>> கிளிக் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!