News September 5, 2025
திருநெல்வேலி மாநகரத்தில் 15 நாட்களுக்கு தடை

திருநெல்வேலி மாநகர காவல் துறை வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்; திருநெல்வேலி மாநகரத்தின் இன்று முதல் வருகின்ற 19ஆம் தேதி வரை பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் கூட்டங்கள் நடத்துவதற்கும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கும் தடைகள் விதிக்கப்படுவதாக திருநெல்வேலி மாநகர காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹடிமணி இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார். *ஷேர் பண்ணுங்க
Similar News
News September 6, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்டம்பர் 5) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News September 5, 2025
நெல்லைக்கு மேலும் ஒரு பெருமை!

குலசையில் 2வது ஏவுதளம் அமைக்கும் நிலையில், பாளையங்கோட்டையில் புதிய விண்வெளி கட்டுப்பாட்டு மையம் அமைக்க ரூ.7.12 கோடி செலவில் டெண்டர் கோரி விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது .இங்கே கட்டுப்பாட்டு மையம் அமைத்து அதில் விண்கலன்களை கண்காணிப்பது, கட்டளைகளை பிறப்பிப்பது போன்ற முக்கிய பணிகள் இந்த மையத்தில் நடைபெறும் என இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது. நெல்லைக்கு மேலும் பெருமை சேர்க்கும் இந்த செய்தியை ஷேர் செய்யுங்க
News September 5, 2025
நெல்லை: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

நெல்லை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0462-2500592 அணுகலாம். SHARE பண்ணுங்க!