News April 10, 2024
ரயில் பயணிகளின் கவனத்திற்கு

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை சென்டிரல்- கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் நாளை(11.04.24) ஞாயிறு கால அட்டவணையின்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், பயணிகள் முன்பதிவு மையங்கள் ஞாயிறு கால அட்டவணைப்படி (காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை) பகுதி நேரம் மட்டுமே செயல்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 30, 2025
அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியாக பேசவேண்டும் என்று சிறுமியை அழைத்த அறிவியல் ஆசிரியர் மோகன், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட மற்றொரு ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், ஆசிரியர் மோகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
News April 30, 2025
அட்சய திருதியை: தங்கம் வாங்க போறீங்களா?

அட்சய திருதியையான இன்று (ஏப்.30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் உங்களுக்கு செழிப்பை தரும். உப்பு, குங்குமம், மஞ்சள் போன்ற மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். அதனால், சென்னையில் உங்கள் வீட்டருகே உள்ள லட்சுமி / பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு தங்கம் வாங்குங்கள். காலை 9:30 – 10:30, மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம். அந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள். எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க
News April 30, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (29.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*