News September 5, 2025
கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ₹1000 கொடுக்கும் திட்டம்

தமிழ் புதல்வன் திட்டம் மூலம், 6-12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. 21-30 வயதுக்குள் இருக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள், தொலைதூரக் கல்வி மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. https://umisdashboard.tnega.org/auth/login – ல் விண்ணப்பியுங்கள். SHARE.
Similar News
News March 28, 2026
சர்ச்சையில் சிக்கிய பழனியாண்டிக்கு சீட் மறுப்பு

கே.என்.நேரு உடன் மோதல், செய்தியாளர்களை தாக்கியது என அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரங்கம் MLA பழனியாண்டிக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட செந்தில் குமாருக்கு, பாலக்கோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அம்பத்தூர், தி.நகர், அண்ணா நகர், ராயபுரம் தொகுதிகளில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
BREAKING: விலகினார்… ஸ்டாலின் அதிர்ச்சி

திமுகவின் 164 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிலையில், பட்டியலில் தன் பெயர் இல்லாததால் தி.நகர் சிட்டிங் MLA-வான கருணாநிதி தனது கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தனது பல ஆண்டு கால உழைப்பிற்கு தற்போது மதிப்பில்லாத காரணத்தினால் தான் வகித்து வரும் பகுதி செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அதில் குறிப்பிட்டுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
FASTag கட்டணம் உயர்வு.. 4 நாள்களில் அமலுக்கு வருகிறது

FASTag ஆண்டு பாஸ் கட்டணம் ₹3,000-ல் இருந்து ₹3,075-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவித்துள்ளது. ஒருமுறை செலுத்தும் இந்த கட்டணத்தின் மூலம், ஒரு வருடம் (அ) 200 பயணங்களுக்குத் தடையின்றி தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாஸை ‘Rajmarg Yatra’ செயலி மூலம் பெற்றுக்கொள்ளலாம்.


