News September 5, 2025
தி.மலை: தேர்வு இல்லை; உள்ளூரில் அரசு வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் இரவு காவலர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கிடையாது, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.71,900 வரை வழங்கப்படும். <
Similar News
News September 6, 2025
திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்

அருணாச்சலீஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செப்டம்பர் 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. பௌர்ணமி திதி அன்று அதிகாலை 1.46 மணிக்கு தொடங்கி, இரவு 12.30 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் திருவண்ணாமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
News September 6, 2025
பௌர்ணமி கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

பௌர்ணமி கிரிவலத்தையொட்டி செப்டம்பர் 7 அன்று விழுப்புரம்–திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. விழுப்புரம்–திருவண்ணாமலை (06130): காலை 10.10 மணி புறப்பட – 11.45 மணி வருகை. திருவண்ணாமலை–விழுப்புரம் (06129): மதியம் 12.40 மணி புறப்பட – 2.15 மணி வருகை. 8 பெட்டிகளுடன் இயங்கும் இச்சிறப்பு ரயில், சேங்கம்சபுரம், மணம்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
News September 5, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (05.09.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.