News September 5, 2025
BREAKING: வெளுத்து வாங்கும் கனமழை

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு பரவலாக மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. குறிப்பாக செப்.8 மற்றும் 9-ம் தேதிகளில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுகோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகையில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் 2 நாள்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம். குடையை ரெடியா வையுங்க மக்களே..!
Similar News
News March 24, 2026
எதிர்க்கட்சி டூ 10 சீட்.. தேர்தல் அரசியலில் தேமுதிக

2011-ல் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற தேமுதிக, சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக 15-க்கும் குறைவான இடங்களில் போட்டியிடவுள்ளது. தேமுதிக கடந்து வந்த பாதை: 2006 – 232(தனித்து போட்டி), 2011- 41(அதிமுக+), 2016 – 105(மக்கள் நலக் கூட்டணி), 2021 – 60(அமமுக+), 2026 – 10(திமுக+). 2021 தேர்தலில் 0.43% வாக்குகளை பெற்ற தேமுதிகவுக்கு திமுக 10 சீட்களை ஒதுக்கியது பற்றி உங்கள் கருத்து?
News March 24, 2026
ரேஷன் கார்டுகளுக்கு.. இரவில் இனிப்பான அறிவிப்பு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியோடு 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும் என EPS வாக்குறுதி அளித்துள்ளார். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கப்படும். பொங்கல் தொகுப்புடன் ₹1,000 பரிசுத்தொகை அளிக்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஃபிரிட்ஜ் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர் கொடுத்துள்ளார்.
News March 24, 2026
அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது வடகொரியா

தென் கொரியாவை நிரந்தர எதிரியாக அறிவித்த கிம் ஜாங் உன், வட கொரியாவில் அணு ஆயுத திட்டங்கள் வலுப்படுத்தப்படும் என்பதை உறுதி செய்துள்ளார். இதன்மூலம் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்காக அணு ஆயுதக் குறைப்பை முன்வைத்த US-ன் கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார். அத்துடன் வட கொரியாவின் இறையாண்மையை அச்சுறுத்தும் எந்தவொரு முயற்சியையும் தயக்கமின்றி, இரக்கமின்றி எதிர்கொள்வோம் எனவும் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.


