News September 5, 2025
விழுப்புரம் பெண்கள் இந்த நம்பர் நோட் பண்ணிக்கோங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, விழுப்புரம் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9150058446) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணு
Similar News
News September 5, 2025
அறிஞர் அண்ணா கல்லூரி: தேசிய அளவில் சாதனை

தேசிய அளவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை NIRF வெளியிட்டுள்ளது. இதில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, 154-வது இடத்தைப் பிடித்துத் தமிழகத்திற்கும், குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. மேலும், வேலூர் மண்டலத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் இக்கல்லூரி முதலிடம் வகிக்கிறது.
News September 5, 2025
இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 5) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 5, 2025
விழுப்புரம்: தரமற்ற பெட்ரோலா? இதை பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் தரமானதாக இல்லையென்றால், நீங்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம். இதற்காக, அனைத்து பெட்ரோல் நிறுவனங்களும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளன.
▶️ இந்தியன் ஆயில்: 18002333555
▶️ பாரத் பெட்ரோல்: 1800224344
▶️ HP பெட்ரோல்: 9594723895
பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!