News April 10, 2024
காஸ் சிலிண்டரில் தேர்தல் விழிப்புணர்வு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிப்போம், நியாயமாக வாக்களிப்போம் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து சிலிண்டர்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி இன்று (ஏப்.10) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் துவக்கி வைத்தார்.
Similar News
News July 8, 2025
செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை

செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
வாடகை வீடு மோசடிகளில் சிக்காமல் இருக்க செங்கல்பட்டு காவல்துறை சில வழிகளை கூறியுள்ளது. வாடகை ஒப்பந்தத்தை கவனமாக மதிப்பாய்வு செய்யவும். போலியான முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி அவசரப்பட்டு ஒப்பந்தம் செய்யவோ, பணம் கொடுத்து ஏமாறவோ வேண்டாம். இதுகுறித்து புகார்கள் தெரிவிக்க அழைக்கவும் மாவட்ட காவல் அலுவலக உதவி எண் ☎️ 7200102014.
News July 8, 2025
ஹவுஸ் ஓனருடன் பிரச்சனையா?

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க ஹவுஸ் ஓனர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ 1800 599 01234 / 9445000414 (வாடகை அதிகாரி) புகார் செய்யலாம் அல்லது உங்க பகுதி <
News July 8, 2025
வாடகை வீட்டில் இருப்போருக்கான உரிமைகள்

தமிழ்நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கன புதிய சட்டம் 2017ன் படி ஹவுஸ் ஓனர் குடியிருப்பவர் வீட்டிற்குள் 7 மணிக்குள் அல்லது இரவு எட்டு மணிக்குப் பின்னர் செல்ல கூடாது. மூன்று மாத வாடகையை மட்டுமே முன் பணமாகப் பெற வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். வாடகை ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. கட்டாயம் ரசிது தர வேண்டும். ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும்