News September 5, 2025
செங்கோட்டையனுக்கு துணையாக நிற்போம்: OPS

அதிமுக தொண்டர்கள் மனதில் நினைத்துள்ளதை செங்கோட்டையன் வெளிப்படுத்தியுள்ளதாக OPS கருத்து தெரிவித்துள்ளார். அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என நினைக்கும் செங்கோட்டையனுக்கு, உறுதுணையாக நிற்போம் எனவும் அவர் கூறியுள்ளார். தொண்டர்கள் பிரிந்துள்ளதால் 4, 5 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற முடியவில்லை என்றும், தேர்தலில் வெற்றி பெற பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News September 7, 2025
Parenting: உங்கள் குழந்தையிடம் இதெல்லாம் கவனிச்சீங்களா?

பெற்றோர்களே, குழந்தையை ஒழுக்கமாக, அறிவாக வளர்த்தால் போதாது, அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதையும் உறுதி செய்யவேண்டும். 10 வயதுக்குள்ளான குழந்தைகள் சந்தோஷமாக இருக்கிறார்களா என்பதை கண்டுபிடிக்க வழிகள் இருக்கிறது. ➤சந்தோஷமான குழந்தைகள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தயங்கமாட்டார்கள் ➤விளையாட்டுத் தனமாக இருப்பர் ➤உறங்குவதில் சிரமம் இருக்காது ➤ உங்களுடன் நேரத்தை செலவிட விரும்புவர். SHARE.
News September 7, 2025
துணை ஜனாதிபதிக்கு சம்பளம் இல்லையா?

துணை ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. நாட்டின் 2-வது உயரிய பதவியான துணை ஜனாதிபதிக்கு சம்பளம் கிடையாது என்பது தெரியுமா? உண்மைதான். அரசியல் சட்ட அந்தஸ்து கொண்ட பதவிகளில், சம்பளம் இல்லாத ஒரே பதவி இது மட்டும் தான். ஆனால், ராஜ்யசபா தலைவராக பணியாற்றுவதற்காக, அவருக்கு மாதம் ₹4 லட்சம் சம்பளம் வழங்கப்படும். இதுபோக இலவச பங்களா, மருத்துவப்படி, விமான பயணம் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.
News September 7, 2025
நாடு முழுவதும் வரப்போகும் மாற்றம்? ECI ஆலோசனை

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை (SIR) மேற்கொள்வது தொடர்பான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, வரும் 10-ம் தேதி அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன், இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பாஜகவிற்கு எதிரான வாக்காளர்களை நீக்குவது, வெளிப்படைத்தன்மை இல்லாதது என SIR-க்கு எதிராக எதிர்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டை நாடியது.