News September 5, 2025
ஏற்கும் மனநிலை EPS-க்கு இல்லை: செங்கோட்டையன்

அதிமுக ஒருங்கிணைப்பு நடக்கவேண்டும் என 2024-ல் EPS-யிடம் வலியுறுத்தியதாக செய்தியாளர் சந்திப்பில் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தொடர் தோல்விகளால் கட்சி தொய்வடைந்து இருப்பதாக கூறி வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், அன்பழகன், உட்பட 6 பேர் EPS-ஐ சந்தித்து வலியுறுத்தியதாகவும், ஆனால் அவருக்கு கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லை எனவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 16, 2026
வங்கி கணக்கில் ₹12,000.. தமிழக அரசு கொடுத்த GOOD NEWS

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான திறன் படிப்புதவித் திட்ட தேர்வு(NMMS) ஜன.10 -ல் நடைபெற்றது. இதில், தேர்வானவர்களின் பட்டியலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் Other Examination பகுதியில் சென்று பட்டியலை காணலாம். தேர்வாகியுள்ள மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹12,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு *₹48,000 உதவித்தொகை வழங்கப்படும்.
News March 16, 2026
உலக சாம்பியன்களை பாராட்டிய CM ஸ்டாலின்

T20I WC-ஐ தொடர்ந்து 2-வது முறையாக வென்று சாதனை படைத்த இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி & வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். அவர்கள் இருவரையும் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து CM ஸ்டாலின் பாராட்டியுள்ளார். அப்போது T20I அணியின் ஜெர்சி & தொப்பியை CM-க்கு இருவரும் பரிசளித்தனர். இந்த சந்திப்பின் போது, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியும் உடனிருந்தார்.
News March 16, 2026
கஞ்சா விற்பனையால் பாலியல் தாக்குதல்: அண்ணாமலை

திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில், TN முழுவதும் கஞ்சா புழக்கம் பெருகியுள்ளதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் சேலம் கோரிமேட்டில் 66 வயது மூதாட்டியை, கஞ்சா போதையில் 2 பேர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கும் சம்பவத்தை அதிர்ச்சியுடன் சுட்டிக்காட்டியுள்ளார். கஞ்சா விற்பனையில் பெரும்பாலும் திமுகவினரே ஈடுபடும் நிலையில் உடனடியாக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் கோரியுள்ளார்.


