News September 5, 2025
BIG BREAKING: முடிவை அறிவித்தார் செங்கோட்டையன்

2017-க்கு பிறகு அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்த அதிமுக, கட்சியில் இருந்து வெளியில் சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து விலகியவர்கள், எவ்வித நிபந்தனைகளும் இன்றி கட்சியில் இணைய தயாராக இருப்பதாகவும், விரைந்து முடிவுகளை எடுக்கவில்லை என்றால் ஒன்றிணைக்கும் நாங்கள் இணைந்து செய்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News September 8, 2025
ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிகள் படிக்க வாய்ப்பு

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் அவசரப் பிரிவு, சுவாச சிகிச்சை, டயாலிசிஸ், மயக்கவியல் , ஈ.சி.ஜி, எலும்பு முறிவு போன்ற துறைகளில் படிப்புகளுக்கு காலியாக இடங்கள் உள்ளது. இதில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை ஈரோடு மருத்துவக் கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
News September 8, 2025
₹20 கட்டினால் ₹2 லட்சம் காப்பீடு; முந்துங்க!

பிரீமியம் கட்ட பணம் இல்லை என்பதால் விபத்து காப்பீட்டை தொடங்காமல் இருக்கீங்களா? PM சுரக்ஷா பீம யோஜனா திட்டத்தில், ஆண்டுக்கு ₹20 கட்டினால் ₹2 லட்சம் வரை காப்பீடு தொகையாக பெறலாம். காப்பீடு எடுக்கும் நபர் விபத்தில் கை, கால்களை இழந்தாலோ அல்லது இறந்தாலோ, குடும்பத்தினருக்கு இந்தப் பணம் கிடைக்கும். அருகில் உள்ள வங்கிக்கு சென்று இதற்கு விண்ணப்பியுங்கள். SHARE.
News September 8, 2025
அதிமுக ICU-வில் அட்மிட்டாகும் நிலை ஏற்படும்: உதயநிதி

EPS-ன் பரப்புரையின் போது, ஆம்புலன்ஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சுட்டிக்காட்டி, உதயநிதி கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். ஆம்புலன்ஸில் செல்லும் நிலையை அதிமுகவிற்கு மக்கள் உருவாக்குவார்கள் எனக் கூறிய அவர், விரைவில் ICU-வில் தான் அதிமுக அனுமதிக்கப்படும் என்றார். உங்களை காப்பாற்றும்(EPS-ஐ) பணியையும் CM ஸ்டாலின் தான் செய்வார் எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?