News September 5, 2025

புதுகை: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

புதுக்கோட்டை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!

Similar News

News September 8, 2025

புதுகை மாணவி குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம்

image

சென்னையில் மண்டல அளவில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் எனது புதுக்கோட்டை மாணவி ஜீவா தங்கப்பதக்கம் வென்று முதலமைச்சர் கோப்பை மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளார். மாநில போட்டியில் வென்று பதக்கங்களைப் பெற அவருக்கும் அவரது பயிற்றுநர் அப்துல் காதருக்கும் சக மாணவர்கள், பொதுமக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News September 8, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழை அளவு வெளியீடு!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (செப்.7) கடந்த 24 மணி நேரத்தில் அறந்தாங்கி பகுதியில் 61.8 மி.மீ, ஆயிங்குடி பகுதியில் 62.4 மி.மீ, நாகுடி பகுதியில் 68 மி.மீ, ஆவுடையார் கோவிலில் 14.8 மி.மீ, மணமேல்குடி 67 மி.மீ மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையினால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News September 8, 2025

புதுகை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. புதுகை மக்களே இதற்கு விண்ணபிக்க அதிகாரப்பூர்வ <>இணையதளத்தில்<<>>, Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிளும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!