News September 5, 2025

தஞ்சாவூர்: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

தஞ்சாவூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

Similar News

News September 8, 2025

தஞ்சை: நீதிமன்றத்தில் பரபரப்பான தீர்ப்பு

image

செப் 8, 2025 கும்பகோணம் மாங்குடி அருகே நடந்த கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் முக்கிய குற்றவாளியான பெண் ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் கும்பகோணம் நீதிமன்றத்தில் பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த காவல் ஆய்வாளர் மீனா மற்றும் நீதிமன்ற காவலர் சரோஜினி உதவி காவல் கண்காணிப்பாளர் மாவட்ட கண்காணிப்பாளர் பாராட்டினர்.

News September 8, 2025

தஞ்சாவூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தஞ்சை மக்களே இதற்கு விண்ணபிக்க அதிகாரப்பூர்வ <>இணையதளத்தில்<<>>, Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிளும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News September 8, 2025

தஞ்சாவூர்: ஓட ஓட வெட்டி படுகொலை

image

பேராவூரணி பாஜக ஒன்றிய தலைவர் ராஜேஷ் குமார் என்பவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் 15 லட்சம் கடன் தொகை பெற்றுள்ளார். தலைமறைவான சக்திவேலின் தம்பி பிரவீன் குமார் நேற்று நள்ளிரவு ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வாட்டாத்தி கோட்டைபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்துவிட்டு ராஜேஷ் குமார் காவல்நிலத்தில் சரணடைந்தார்.

error: Content is protected !!